தனது 16-வது பிறந்த நாளின்போது சதமடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் அயர்லாந்து வீராங்கனை எமி ஹண்டர்.
ஹராரேவில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. தனது 16-வது பிறந்த நாளின்போது சதமடித்த அயர்லாந்து வீராங்கனை எமி ஹண்டர், 121 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவரை அவர் 4 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இதன்பிறகு பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் மட்டும் எடுத்து 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என அயர்லாந்து அணி வென்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் சதமடித்த எமி ஹண்டர், புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இளம் வயதில் சதமடித்தவர் என்கிற பெருமை இதற்கு முன்பு இந்தியாவின் மிதாலி ராஜிடம் இருந்தது. அவர் 16 வருடங்கள் 205 நாள்களில் சதமடித்திருந்தார். தனது 16-வது பிறந்த நாளின்போது சதமடித்த எமி ஹண்டர், புதிய உலக சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
இளம் வயதில் சதமடித்தவர்கள்
எமி ஹண்டர் - 16 வருடங்கள்
மிதாலி ராஜ் - 16 வருடங்கள், 205 நாள்கள்
சாஹித் அப்ரிடி - 16 வருடங்கள், 217 நாள்கள்
சதமடித்த ஆட்டத்தின் விடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம்! முதல்வர் கலைஞரிடம் விஜய் வழங்கினார்!

சரக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

அண்ணா, விரலை வெட்டி அனுப்பவா? ரசிகைக்கு விஜய் அளித்த பதில் என்ன?







