எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தோனியும் 20-வது ஓவரும்!

இலக்கை வெற்றிகரமாக விரட்டுவதில், தான் என்றுமே ராஜா என்பதை இன்னொருமுறை நிரூபித்துள்ளார் தோனி.

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:51 am IST

இலக்கை வெற்றிகரமாக விரட்டுவதில், தான் என்றுமே ராஜா என்பதை இன்னொருமுறை நிரூபித்துள்ளார் தோனி.

ஐபிஎல் 2021 போட்டியில் தில்லி அணிக்கு எதிரான பிளேஆஃப் ஆட்டத்தை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி. துபையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய தில்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா 60 ரன்களும் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் ஹெட்மையர் 37 ரன்களும் எடுத்தார்கள். ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி பரபரப்பான முறையில் இலக்கை விரட்டி 9-வது முறையாக ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் 70, உத்தப்பா 63 ரன்கள் எடுத்தார்கள். கடைசிக்கட்டத்தில் ஜடேஜாவுக்கு முன்பு களமிறங்கிய தோனி 6 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு மறக்க முடியாத வெற்றியை அளித்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் இலக்கை விரட்டுவதில் தனக்கு நிகர் வேறு யாருமில்லை என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார் தோனி. அவருடைய சாதனைப் புள்ளிவிவரங்கள்:

ஐபிஎல்: இலக்கை வெற்றிகரமாக விரட்டியபோது 20-வது ஓவரில் அதிகமுறை 10 + ரன்கள் எடுத்த வீரர்கள் 

தோனி - 7
பொலார்ட் - 4
பிராவோ - 4
ரோஹித் சர்மா - 2
ஜடேஜா - 2
ஸ்மித் - 2

ஐபிஎல் : 20-வது ஓவரில் 10+ ரன்களை எடுத்து இலக்கை வெற்றிகரமாக தோனி விரட்டியபோது....

18 v பஞ்சாப், 2010 (இர்பான் பதான்)
14 v சன்ரைசர்ஸ், 2013 (ஆஷிஷ் ரெட்டி)
12 v தில்லி, 2014 (உனாட்கட்)
12 v மும்பை, 2014 (பொலார்ட்)
11 v ராஜஸ்தான், 2014 (ஃபாக்னர்)
23 v பஞ்சாப், 2016 (அக்‌ஷர் படேல்)
12 v தில்லி, 2021 (டாம் கரண்)

ஐபிஎல்: 20-வது ஓவரில் 10+ ரன்களை அதிகமுறை எடுத்து இலக்கை வெற்றிகரமாக விரட்டிய அணிகள்

சிஎஸ்கே - 15 முறை
மும்பை, ராஜஸ்தான் - 8 முறை

ஐபிஎல்: இலக்கை வெற்றிகரமாக விரட்டியபோது அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்த வீரர்கள்

தோனி, ஜடேஜா - 25
யூசுப் பதான் - 22
பிராவோ - 19
டி வில்லியர்ஸ் - 19

டி20 ஆட்டத்தில் இலக்கை வெற்றிகரமாக விரட்டியபோது அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்த வீரர்கள்

சோயிப் மாலிக் - 63
பொலார்ட் - 58
பிராவோ - 45
தோனி - 44

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.