டி20 உலகக் கோப்பை அணியில் நரைனுக்கு வாய்ப்பளிக்கப்படுமா?: மே.இ. தீவுகள் கேப்டன் பொலார்ட் பதில்

டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வாய்ப்பளிப்பது பற்றி அந்த அணியின் கேப்டன் பொலார்ட் பதில் அளித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை அணியில் நரைனுக்கு வாய்ப்பளிக்கப்படுமா?: மே.இ. தீவுகள் கேப்டன் பொலார்ட் பதில்

ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் சுநீல் நரைனுக்கு டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வாய்ப்பளிப்பது பற்றி அந்த அணியின் கேப்டன் பொலார்ட் பதில் அளித்துள்ளார்.

ஆர்சிபி அணி ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வெளியேற முக்கியக் காரணமாக இருந்தார் நரைன். திங்கள் அன்று ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசும்போது 4 விக்கெட்டுகள் எடுத்து ஆர்சிபி அணியை 138/7 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய நரைன், பேட்டிங்கிலும் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்தார். தான் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளில் தொடர்ச்சியாக சிக்ஸர்கள் அடித்தார். இதனால் கொல்கத்தா அணி ஆர்சிபி அணியைத் தோற்கடித்தது.

ஐபிஎல் 2021 போட்டியில் 8 ஆட்டங்களில் 60 ரன்கள் எடுத்த நரைன், பந்துவீச்சில் 14 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 6.41. எனினும் டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நரைன் இடம்பெறவில்லை. ஐபிஎல், சிபிஎல் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தாலும் 2019-லிருந்து சர்வதேச டி20 ஆட்டங்களில் நரைன் விளையாடவில்லை. நாங்கள் எதிர்பார்த்த உடற்தகுதி நரைனிடம் இல்லை என தேர்வுக்குழுத் தலைவர் ரோஜர் ஹார்ப்பர் விளக்கம் அளித்தார். 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை அணியில் நரைனுக்கு வாய்ப்பளிப்பது பற்றி கேப்டன் பொலார்ட் கூறியதாவது:

எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே இன்னொரு வீரர் அணியில் சேர்க்கப்படுவார். நரைன் தேர்வாகாதது பற்றிய விளக்கம் ஏற்கெனவே அளிக்கப்பட்டுவிட்டது. அதையும் மீறி நரைனை அணியில் சேர்க்காதது பற்றி கூடுதலாக ஏதாவது சொன்னால் அது வேறு மாதிரி அர்த்தம் கொள்ளப்படும்.  அதனால் அணிக்குத் தேர்வான 15 வீரர்களில் கவனம் செலுத்துவோம். சர்வதேச கிரிக்கெட் வீரராக நரைன் உருவாவதற்கு முன்பு அவரை எனக்கு நண்பராகத் தெரியும். இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வளர்ந்தவர்கள். அவர் ஓர் உலகத்தரமான கிரிக்கெட் வீரர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com