எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது விளையாடிய சிஎஸ்கே, கேகேஆர் வீரர்கள்

ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது விளையாடிய சிஎஸ்கே, கேகேஆர் வீரர்கள்

News image
Updated On :15 அக்டோபர் 2021, 11:46 am

DIN

கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது. 

2012, 2014 என இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இருமுறையும் ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணி வென்றுள்ளது. இருமுறையும் அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், கெளதம் கம்பீர். 2012-ல் சிஎஸ்கேவும் கொல்கத்தாவும் மோதியதில் கொல்கத்தா அணி கோப்பையைக் கைப்பற்றியது. 

இந்நிலையில் 2010-ல் சிஎஸ்கே அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றபோது தோனியும் சுரேஷ் ரெய்னாவும் விளையாடினார்கள். இந்தமுறையும் அவர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்கள். அதேபோல 2012, 2014 ஆண்டுகளில் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது ஷகிப் அல் ஹசனும் நரைனும் விளையாடினார்கள்.

ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது விளையாடிய சிஎஸ்கே, கேகேஆர் வீரர்கள்

சிஎஸ்கே

2010, 2011 2018: தோனி/ ரெய்னா
2011, 2018: பிராவோ
2018: டு பிளெஸ்சிஸ் / ராயுடு / ஜடேஜா / தீபக் சஹார் / ஷர்துல் தாக்குர்

கேகேஆர்

2012, 2014: ஷகிப் அல் ஹசன் / நரைன் 
2014: ராபின் உத்தப்பா (இப்போது சிஎஸ்கே அணியில்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.