சேப்பாக்கம் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டதை மறக்க முடியாது என டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி கூறியுள்ளார்.
நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் வலிமை என்கிற படம் உருவாகி வருகிறது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பொங்கலன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை வலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அவர்களிடம் (வேடிக்கையாக) வலிமை அப்டேட் கேட்டதால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அஜித். ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டார் அஜித்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் சென்னையில் நடைபெற்றபோது இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, எல்லைக்கோட்டுக்கு அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, அஜித் ரசிகர் ஒருவர் அவரிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டார். இதன் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் இதுபற்றி விசாரித்துள்ளார் மொயீன் அலி. தனது யூடியூப் சேனலில் அஸ்வின் கூறியதாவது: மொயீன் அலி என்னிடம் வந்து வாட் இஸ் வலிமை எனக் கேட்டார். வலிமை படம் பற்றி இங்கிலாந்து வீரரிடம் கேட்டதெல்லாம் அபாரம் என்றார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி, சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் தளத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் சேப்பாக்கம் மைதானத்தில் மறக்க முடியாத அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:
சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டதை மறக்க முடியாது. அதேபோல, மைதானத்துக்கு ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தார்கள். அற்புதமாக இருந்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா், வணிகா் நலன் காக்கும் திமுக அரசு தொடர வாய்ப்பளியுங்கள்: திருநெல்வேலி திமுக வேட்பாளா்

ஏழைகளின் மருத்துவ வசதியை மேம்படுத்த 2000 அம்மா மினி மருத்துவமனைகள்: அதிமுக வேட்பாளா்

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: தவெக வேட்பாளா்

அதிமுக வென்றால் மீண்டும் தாலிக்குத் தங்கம் திட்டம்: திருநெல்வேலி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


