சென்னைக்கு அதிர்ச்சியளித்த குஜராத்: டேவிட் மில்லரின் அதிரடியால் வெற்றி

டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்தால் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை குஜராத் அணி வெற்றி பெற்றது.
சென்னைக்கு அதிர்ச்சியளித்த குஜராத்: டேவிட் மில்லரின் அதிரடியால் வெற்றி
சென்னைக்கு அதிர்ச்சியளித்த குஜராத்: டேவிட் மில்லரின் அதிரடியால் வெற்றி

டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்தால் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை குஜராத் அணி வெற்றி பெற்றது.

 ஐபிஎல் தொடரின் 29ஆவது ஆட்டம் புணேவில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ரஷித் கான் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

ஆனால் உத்தப்பா வந்த வேகத்திலேயே 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலியும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதைத்தொடர்ந்து களம்கண்ட ராயுடு, ருதுராஜுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். தொடர்ந்து சொதப்பி வந்த ருதுராஜ் இந்த ஆட்டத்தில் மீண்டும் பார்முக்கு திரும்பினார். அவர் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் ராயுடு 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விரித்திமான் சாகா, சுப்மன் கில் ஆகியோர் எதிர்பார்த்த அளவு தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. விரித்திமான் சாஹா 18 பந்துகளுக்கு 11 ரன்களுடனும், சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த களமிறங்கிய விஜய் சங்கர் ரன் எதுவும் எடுக்காமலும், அபினவ் மனோகர் 12 ரன்களுடனும் வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 51 பந்துகளுக்கு 94 ரன்கள் விளாசி குஜராத் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ரஷித் கான் 21 பந்துகளுக்கு 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதி ஓவரில் 3 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவை எனும் நிலையில் கிரிஸ் ஜோர்டான் வீசிய பந்து நோ பால்-ஆக ப்ரீஹிட் குஜராத் அணிக்கு கிடைத்தது. அடுத்தடுத்த பந்துகளில் ஒரு பவுண்டரி, அதனைத் தொடர்ந்து 2 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com