ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பட்லர் அதிரடி அரைசதம்: மும்பை அணிக்கு 159 ரன்கள் இலக்கு 

பட்லர் அதிரடி அரைசதம் காரணமாக மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 158 ரன்கள் எடுத்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2022, 4:31 pm

DIN

பட்லர் அதிரடி அரைசதம் காரணமாக மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 158 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

ராஜஸ்தாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல், பட்லர் ஆகியோர் களமிறங்கினர். படிக்கல் 15 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் சஞ்சு சாம்சன் களம்கண்டார். இருப்பினும் அந்த அணியில் பட்லரை தவிர யாருக்கும் நிலைத்து ஆடவில்லை. அபாரமாக விளையாடிய பட்லர் 52 பந்துகளில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.  மறைந்த முன்னாள் ஆஸி. கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவை கௌரவிக்கும் விதமாக ராஜஸ்தான் அணி 'SW23' என அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்சி அணிந்து இன்று விளையாடுகிறது.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல்லில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.