தில்லி - லக்னெள ஆட்டம்: அதிரடி வீரர்களைச் சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்களா?

நவி மும்பையில் இன்று நடைபெறும் தில்லி - லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பலவிதங்களில் சுவாரசியமாக இருக்கப் போகிறது.
லக்னெள அணி
லக்னெள அணி

நவி மும்பையில் இன்று நடைபெறும் தில்லி - லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பலவிதங்களில் சுவாரசியமாக இருக்கப் போகிறது.

2 ஆட்டங்களில் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2 புள்ளிகளைக் கொண்டுள்ளது தில்லி அணி. 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் பலமான அணிகளில் ஒன்றாக உள்ளது லக்னெள.

கே.எல். ராகுல், எவின் லூயிஸ், ஸ்டாய்னிஸ்,  டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிஷப் பந்த் என அதிரடி வீரர்கள் பலரும் இன்றைய ஆட்டத்தில் விளையாடவுள்ளார்கள்.

இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இதுவரை ரவி பிஸ்னோயின் பந்துவீச்சில் 4 பந்துகளை எதிர்கொண்டுள்ள வார்னர், 5 ரன்கள் எடுத்து இருமுறை ஆட்டமிழந்துள்ளார். அதேபோல கே.எல். ராகுலுக்கு எதிராக நன்றாகப் பந்துவீசியிருக்கிறார் அக்‌ஷர் படேல். அக்‌ஷருக்கு எதிராக விளையாடிய 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து மூன்று முறை ஆட்டமிழந்துள்ளார் கே.எல். ராகுல்.

வார்னரை மட்டுமல்ல ரிஷப் பந்தையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு பிஷ்னோய்க்கு உள்ளது. ஐபிஎல் 2020 முதல், லெக் ஸ்பின் பந்துவீச்சில் நிதானமாக ரன்கள் எடுக்கும் ஐந்து பேட்டர்களில் (குறைந்தது 50 ரன்கள்) ரிஷப் பந்தும் ஒருவர். லெக் ஸ்பின் பந்துவீச்சில் ரிஷப் பந்தின் ஸ்டிரைக் ரேட் - 105 தான்.

இதனால் அதிரடி பேட்டர்கள் பலர் இன்று விளையாடினாலும் சுழற்பந்துவீச்சாளர்களும் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com