பாண்டியா நிதான அரைசதம்: குஜராத் 162 ரன்கள் சேர்ப்பு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
பாண்டியா நிதான அரைசதம்: குஜராத் 162 ரன்கள் சேர்ப்பு


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் மேத்யூ வேட் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். 7 ரன்கள் எடுத்த நிலையில், ராகுல் திரிபாதியின் சிறப்பான கேட்ச்சால் கில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 11 ரன்களுக்கு நடராஜன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்தது.

உம்ரான் மாலிக் தனது சிறப்பான வேகத்தால் முதல் பந்திலேயே ஹார்திக் பாண்டியாவைத் தாக்கினார். ஆனால், அடுத்த 2 பந்துகளில் பவுண்டரிகள் அடித்து பாண்டியா பதிலடி தந்தார். எனினும், அதே ஓவரின் கடைசி பந்தில் வேட் விக்கெட்டையும் மாலிக் வீழ்த்தினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ரன் ரேட் சற்று குறையத் தொடங்கியது. சிறிய பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைத்த பிறகு டேவிட் மில்லரும் 12 ரன்களுக்கு மார்கோ யான்சென் பந்தில் ஆட்டமிழந்தார்.

புதிதாகக் களமிறங்கிய அபினவ் மனோகர் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், ரன் ரேட் மீண்டும் உயரத் தொடங்கியது. அவர் கொடுத்த 3 கேட்ச் வாய்ப்புகளை ஹைதராபாத் தவறவிட, அதை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. ஆனால், 4-வது முறையாகக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை திரிபாதி தவறவிடவில்லை. அபினவ் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

நடராஜன் கடைசி ஓவரில் 1 பவுண்டரி உள்பட 7 ரன்களை மட்டுமே கொடுத்தார். ராகுல் தெவாட்டியா ரன் அவுட் ஆக, கடைசி பந்தில் ரஷித் கான் போல்டானார்.

கடைசி ஓவரில் அரைசதத்தை எட்டிய ஹார்திக் பாண்டியா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் (42 பந்துகள்) சேர்த்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் தலா 2 விக்கெட்டுகளையும் மார்கோ யான்சென், உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com