ஐபிஎல் போட்டியில் மும்பையை விட மோசமான தோல்விகளைக் கண்ட அணி உண்டா?

ஐபிஎல் போட்டியில் மும்பையை விட மோசமான தோல்விகளைக் கண்ட அணி உண்டா?

4 அணிகள் தொடர்ச்சியாக 9 தோல்விகளைப் போட்டியின் நடுவில் எதிர்கொண்டுள்ளன.
Published on

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது.

ஐபிஎல் போட்டியில் இதுவரை வேறு எந்த அணியும் முதல் 8 ஆட்டங்களில் தோற்றதில்லை.

இப்போது ரசிகர்களிடம் உள்ள கேள்வி.

ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியாவது இப்படி மோசமாகத் தொடர் தோல்விகளை எதிர்கொண்டதுண்டா? அல்லது 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை அணி தான் இதிலும் முன்னணியில் உள்ளதா?

ஐபிஎல் போட்டியில் 2013-ல் தில்லி டேர்டெவில்ஸும் 2019-ல் ஆர்சிபியும் முதல் 6 ஆட்டங்களில் தோற்றன. அந்த அணிகளைத் தாண்டித்தான் தற்போது முதல் 8 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது மும்பை. அதனால் இந்த விஷயத்தில் மும்பை தான் முன்னணியில் உள்ளது.

2010-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முதல் 8 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. முதல் 3 ஆட்டங்களில் தோற்று 4-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சூப்பர் ஓவர் வழியாக வீழ்த்தியது. அதன்பிறகு 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாகத் தோற்றது. அதனால் முதல் 8 ஆட்டங்களில் 1 வெற்றி என்றாலும் தொடர்ச்சியாக நிறைய ஆட்டங்களில் அந்த அணி தோல்வியடையவில்லை. 

போட்டியின் நடுவில் எந்த அணி அதிகத் தோல்விகளைச் சந்தித்துள்ளது?

4 அணிகள் தொடர்ச்சியாக 9 தோல்விகளைப் போட்டியின் நடுவில் எதிர்கொண்டுள்ளன. 2009-ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், 2012, 2013 ஆகிய இரு ஆண்டுகளிலும் புணே வாரியர்ஸ் (அடப்பாவமே!), 2014-ல் தில்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் போட்டியின் நடுவில் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளன. 

லீக் ஆட்டங்களின் முடிவில் அதிகத் தோல்விகளைக் கண்ட அணிகள் (2012, 2013-ல் மட்டும் தலா 16 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன)

2008 - தில்லி - 12 
2009 - கேகேஆர் - 10
2010 - பஞ்சாப் - 10
2011 - தில்லி, பஞ்சாப் - 9
2012 - பஞ்சாப் - 12 (16 லீக் ஆட்டங்களில்)
2013 - தில்லி - 13 (16 லீக் ஆட்டங்களில்)
2014 - தில்லி - 12
2015 - பஞ்சாப் - 11
2016 - பஞ்சாப் - 10
2017 - ஆர்சிபி, குஜராத் - 10
2018 - தில்லி - 9
2019 - ஆர்சிபி, ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா, சன்ரைசர்ஸ் - 8 (சன்ரைசர்ஸ் பிளேஆஃப்புக்குத் தகுதி!)
2020 - ராஜஸ்தான், சிஎஸ்கே, பஞ்சாப் - 8
2021 - சன்ரைசர்ஸ் - 11
2022 - ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com