ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுங்கள்: விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை

ஐபிஎல் 2021 போட்டியில் மிக மோசமாக விளையாடி வருகிறார் கோலி.

News image
Updated On :27 ஏப்ரல் 2022, 12:06 pm

DIN

ஐபிஎல் 2021 போட்டியில் மிக மோசமாக விளையாடி வருகிறார் கோலி. 9 ஆட்டங்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடைசி 5 ஆட்டங்களில் 9, 0, 0, 12, 1 என மொத்தமாக 22 ரன்களே எடுத்துள்ளார். இதற்குத் தீர்வு தான் என்ன?

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விராட் கோலிக்குத் தற்போதைய தேவை, ஓய்வு. இடைவெளி இல்லாமல் அவர் விளையாடி வருகிறார். மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார். எனவே தற்போது ஓய்வு எடுத்துக்கொள்வது நல்ல முடிவாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் 6, 7 வருடங்கள் விளையாட எண்ணினால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலக வேண்டும். விராட் கோலிக்கு மட்டுமல்லாமல் வேறு எந்த வீரருக்கும் இந்த அறிவுரையைத்தான் கூறுவேன். இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என விரும்பினால் எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டும். 

Story image

ஐபிஎல் போட்டி நடைபெறும்போதுதான் இந்திய அணி சர்வதேச ஆட்டங்களில் விளையாடுவதில்லை. நான் பாதிப் போட்டியில் தான் விளையாடுவேன், எனவே எனக்குப் பாதித் தொகை மட்டும் கொடுங்கள் என்று ஐபில் அணியிடம் கூறுங்கள். விராட் கோலி இளைஞர் தான். இன்னும் 5-6 வருடங்கள் விளையாடுவார் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.