வாஷிங்டன் சுந்தர், நடராஜனைத் தேர்வு செய்யாதது ஏன்?: குஜராத் பயிற்சியாளர் பதில்

நாங்கள் ஏலத்துக்கு முன்பே மூன்று வீரர்களைத் தேர்வு செய்தோம். பாண்டியா, ரஷித் கானுக்குத் தலா ரூ. 15 கோடி...
நடராஜன்
நடராஜன்

ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்துள்ள அணி - குஜராத் டைட்டன்ஸ்.

பாண்டியா தலைமையில் விளையாடும் அந்த அணியின் பயிற்சியாளர், முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா.

ஐபிஎல் ஏலத்தில் வாஷிங்டன் சுந்தரை ரூ. 8.75 கோடிக்கும் நடராஜனை ரூ. 4 கோடிக்கும் சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்தது. ஏலத்தில் இவ்விருவரை மட்டுமல்லாமல் இஷான் கிஷன், ரபாடா, ஷ்ரேயஸ் ஐயர், கிருனாள் பாண்டியா, மிட்செல் மார்ஷ் ஆகியோரையும் தேர்வு செய்ய இதர அணிகளுடன் கடுமையாகப் போராடியது குஜராத் அணி. ஆனால் தொகை மேலும் அதிகமாகவே, போட்டியிலிருந்து விலகியது. இதுபற்றி, கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு நெஹ்ரா பேட்டியளித்ததாவது:

நாங்கள் ஏலத்துக்கு முன்பே மூன்று வீரர்களைத் தேர்வு செய்தோம். பாண்டியா, ரஷித் கானுக்குத் தலா ரூ. 15 கோடி, ஷுப்மன் கில்லுக்கு ரூ. 8 கோடி. நீங்கள் குறிப்பிடும் வீரர்களையும் தேர்வு செய்திருக்கலாம். ஆனால் எங்கள் கையில் ஓரளவுதான் பணம் இருந்தது. உதாரணத்துக்கு வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயஸ் ஐயருக்காகக் குறிப்பிட்ட தொகை வரை வழங்க இருந்தோம். ஓர் அணிக்கு வெற்றிகளைத் தரக்கூடிய வீரர்கள் தேவைதான். ஆனால் எதற்கும் ஒரு விலை உண்டு. பிறகு ஏலத்தில் நாங்கள் ஷமி, ஃபெர்குசன், ஜேசன் ராய் ஆகியோரைத் தேர்வு செய்தோம். இவர்களோடு நாங்கள் முதலில் தேர்வு செய்த மூன்று வீரர்களையும் சேர்த்து இவர்களைச் சுற்றி ஒரு நல்ல அணியை நாங்கள் உருவாக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com