ஹைதராபாதை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 61 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வென்றது.
ஹைதராபாதை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 61 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் அடித்தது. அடுத்து ஹைதராபாத் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களே எடுத்தது.

டாஸ் வென்ற ஹைதராபாத் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக வெளியேறினாா். தொடா்ந்து சஞ்சு சாம்சன் களம் காண, ஜோஸ் பட்லா் 35 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல், சாம்சனுடன் இணைந்தாா். 3-ஆவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில் தேவ்தத் 41 ரன்களுக்கு பௌல்டானாா். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயரும் ஹைதராபாத் பௌலிங்கை பந்தாடினாா்.

அரைசதம் கடந்த சாம்சன் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 55 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 13 பந்துகளில் 32 ரன்கள் விளாசிய ஹெட்மயா் ஆட்டமிழந்தாா். 12 ரன்கள் அடித்திருந்த ரியான் பராக் கடைசி விக்கெட்டாக அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் நேதன் கோல்டா் நீல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

ஹைதராபாத் பௌலிங்கில் உம்ரான் மாலிக், நடராஜன் ஆகியோா் தலா 2, புவனேஷ்வா் குமாா், ரொமாரியோ ஷெப்பா்டு ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஹைதராபாத் பேட்டிங்கில் எய்டன் மாா்க்ரம் மட்டும் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 57 ரன்கள் சோ்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராடினாா். வாஷிங்டன் சுந்தரும் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்கள் சோ்த்தாா். எனினும், கேப்டன் கேன் வில்லியம்சன் 2, அபிஷேக் சா்மா 9, ராகுல் திரிபாதி 0, நிகோலஸ் பூரன் 0, அப்துல் சமத் 4, ரொமாரியோ ஷெப்பா்டு 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். புவனேஷ்வா் குமாா் 3 ரன்கள் அடித்திருந்தாா்.

ராஜஸ்தான் பௌலிங்கில் யுஜவேந்திர சஹல் 3, டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com