நடக்கும் என்றால் நடக்கும்: பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி

பள்ளியிலேயே தனக்குக் கணிதப் பாடம் சரியாக வராது என்பதால் பிளேஆஃப் கணக்குகள் பற்றி பெரிதாக எண்ணுவதில்லை என  சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.
நடக்கும் என்றால் நடக்கும்: பிளேஆஃப் வாய்ப்பு பற்றி தோனி

பள்ளியிலேயே தனக்குக் கணிதப் பாடம் சரியாக வராது என்பதால் பிளேஆஃப் கணக்குகள் பற்றி பெரிதாக எண்ணுவதில்லை என  சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. கான்வே 87 ரன்களும் ருதுராஜ் 41 ரன்களும் எடுத்தார்கள். தோனி 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்துக் கடைசிக்கட்டத்தில் மேலும் விரைவாக ரன்கள் எடுக்க உதவினார். தில்லி கேபிடல்ஸ் அணி, 17.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

புள்ளிகள் பட்டியலில் பெரும்பாலும் கடைசி இரு இடங்களில் இருந்த சிஎஸ்கே அணி, தற்போது இந்த வெற்றியால் மெல்ல 8-ம் இடத்துக்கு நகர்ந்துள்ளது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்புக்குச் செல்ல சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இதுபற்றி தோனியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:

ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். நான் கணிதப் பாடத்துக்கான ரசிகன் அல்லன். பள்ளியிலேயே கணிதப் பாடம் எனக்குச் சரியாக வராது. உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்களே தீர்மானிக்கிறீர்கள். என்ன முக்கியமென்றால் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும். இன்னொரு அணி அந்த அணியைத் தோற்கடித்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் நினைத்தால் கூடுதல் அழுத்தம் தான் ஏற்படும். 

உங்கள் ஆட்டங்களை நன்குத் திட்டமிட்டு விளையாடுங்கள். வெற்றி பெறும் முனைப்புடன் ஐபிஎல் போட்டியில் ஆனந்தமாக விளையாடுங்கள். மற்ற இரு அணிகள் விளையாடும்போது பதற்றம் ஆகவேண்டாம். ஐபிஎல்லை ரசித்து விளையாடுங்கள். நடக்கும் என்றால் நடக்கும். மீதமுள்ள மூன்று ஆட்டங்களிலும் நன்கு விளையாடுவது முக்கியம். யார் யாரைத் தேர்வு செய்யவேண்டும் எனப் பார்க்கவேண்டும். அடுத்த வருடத்துக்காகத் திட்டமிட வேண்டும். நாங்கள் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றால் நல்லது. இல்லையெனில், அத்துடன் உலகம் அழிந்துவிடும் என எண்ணக்கூடாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com