சிஎஸ்கேவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி!

இரு அணிகளும் மோதிய முதல் 19 ஆட்டங்களில் சிஎஸ்கே 10 ஆட்டங்களிலும் மும்பை 9 ஆட்டங்களிலும் வென்றன.
சிஎஸ்கேவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி!

ஐபிஎல் தொடங்கிய சில வருடங்களிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பலத்தை நிரூபித்து நெ.1 அணியாக இருந்தது. 2010, 2011 என அடுத்தடுத்த வருடங்களில் கோப்பையை வென்றது. 

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சிஎஸ்கே மோதும்போது பலத்த போட்டி இருக்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்போது இருக்கும் ஒரு பரபரப்பு இருக்கும்.

இரு அணிகளும் மோதிய முதல் 19 ஆட்டங்களில் சிஎஸ்கே 10 ஆட்டங்களிலும் மும்பை 9 ஆட்டங்களிலும் வென்றன.

ரோஹித் சர்மா கேப்டனான பிறகு நிலைமை மாறியது. பொலார்ட், மலிங்கா, பும்ரா போன்ற பலம்பொருந்திய வீரர்களால் மும்பை அணி அசைக்க முடியாத சக்தியாக மாறியது. இன்று வரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ஒரே அணி மும்பை தான். இதனால் சென்னை - மும்பை இடையிலான போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கடைசியாக இரு அணிகளும் விளையாடிய 15 ஆட்டங்களில் சிஎஸ்கே 4 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது. நேற்றைய ஆட்டத்துடன் சேர்த்து மும்பைக்கு 11 ஆட்டங்களில் வெற்றி.

மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே அணி. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தோனி அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு பேட்டிங் செய்த மும்பை அணி, 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு சமாளித்து விளையாடி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணி மோசமாக விளையாடி வரும் இந்த வருடத்திலும் மும்பையிடம் ஓர் ஆட்டத்தில் தோற்றுள்ளது சிஎஸ்கே. இனி வரும் வருடங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்குமா? அல்லது சிஎஸ்கே விஸ்வரூபம் எடுத்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com