சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல ஆஸி. வீரர் விலகல்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார் கம்மின்ஸ். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:44 pm IST

ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து பிரபல ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். 

ஐபிஎல் ஏலத்தில் ஆஸி. டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸை ரூ. 7.25 கோடிக்குத் தேர்வு செய்தது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 5 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய கம்மின்ஸ், 7 விக்கெட்டுகளை எடுத்தார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார் கம்மின்ஸ். 

அன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 33 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்கிற நிலையில் மறக்க முடியாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கம்மின்ஸ். இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதுதான் அவருடைய முதல் ஆட்டம். டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். 15 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் (14) அரைசதம் அடித்த சாதனையைச் சமன் செய்தார் கம்மின்ஸ். ஐபிஎல் போட்டியில் 15 பந்துகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் கம்மின்ஸூக்கே முதல் இடம். 

இந்நிலையில் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து கம்மின்ஸ் விலகியுள்ளார். இந்தக் காயம் சிறிய அளவிலான பிரச்னை என்பதால் சிட்னியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய அணியின் அடுத்த மாத இலங்கைச் சுற்றுப்பயணத்தில் கம்மின்ஸ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.