டி20 கிரிக்கெட்: கனவுலகில் வாழும் மிட்செல் மார்ஷ்

இதுவரை 7 ஆட்டங்களில் 251 ரன்கள் எடுத்துள்ளார் மிட்செல் மார்ஷ். இரு அரை சதங்கள். ஸ்டிரைக் ரேட் - 133.51.
டி20 கிரிக்கெட்: கனவுலகில் வாழும் மிட்செல் மார்ஷ்

டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து யாராலும் சிறப்பாக விளையாட முடியாது.

பேட்டர்கள் விரைவாக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் அவ்வபோது சொதப்பி விடும் தருணங்கள் அமையும்.

ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் மார்ஷ், டி20 கிரிக்கெட்டில் சமீபகாலமாகத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். உலகின் சிறந்த டி20 பேட்டர் என நிபுணர்களால் புகழப்படுகிறார். ஜூலை 2021-க்குப் பிறகு 3-ம் நிலை பேட்டராக விளையாடி வருகிறார். வழக்கமாக வேகப்பந்து வீச்சில் அதிரடியாக விளையாடும் மார்ஷ், தற்போது சுழற்பந்துவீச்சிலும் வேகமாக ரன்கள் எடுக்கத் தொடங்கிவிட்டார். இதனால் தான் அவரால் தொடர்ந்து சீரான வேகத்தில் ரன்கள் எடுக்க முடிகிறது.

கடந்த வருடம் விளையாடிய டி20 தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 219 ரன்களும் வங்கதேசத்துக்கு எதிராக 156 ரன்களும் எடுத்தார். அதன்பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 185 ரன்கள் எடுத்தார். இறுதிச்சுற்றில் 50 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் மார்ஷ். இதனால் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 6.50 கோடிக்கு தில்லி அணி தேர்வு செய்தது.

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கெளரவம்
டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கெளரவம்

2020-ல் சன்ரைசர்ஸுக்காக முதல் ஆட்டத்தில் விளையாடியபோது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். கடந்த வருடம் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க முடியாத காரணத்தால் போட்டியிலிருந்து விலகினார். காயம் மற்றும் கரோனா பாதிப்பால் இந்தமுறை ஆரம்பத்தில் சில ஆட்டங்களில் அவரால் விளையாட முடியாமல் போனது. 

இந்த வருடம் இதுவரை 7 ஆட்டங்களில் 251 ரன்கள் எடுத்துள்ளார் மிட்செல் மார்ஷ். இரு அரை சதங்கள். ஸ்டிரைக் ரேட் - 133.51. நேற்று, பஞ்சாப் அணிக்கு எதிராக 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து தில்லி அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். டி20 கிரிக்கெட்டில் கனவுலகி வாழ்ந்து வருகிறார் மிட்செல் மார்ஷ். எங்குச் சென்றாலும் அவருடைய பேட் ரன்களைக் குவிக்கிறது. தில்லி அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற மிட்செல் மார்ஷின் பங்களிப்பை அதிகம் நம்பியிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com