ஐபிஎல் பிளேஆஃப்: மழைக்காக சில புதிய விதிமுறைகள்

ஒரே ஒரு ஓவரை வைத்து ஐபிஎல் சாம்பியனை முடிவு செய்ய முடியுமா?
ஐபிஎல் பிளேஆஃப்: மழைக்காக சில புதிய விதிமுறைகள்

ஒரே ஒரு ஓவரை வைத்து ஐபிஎல் சாம்பியனை முடிவு செய்ய முடியுமா?

அதற்கான வாய்ப்பு உள்ளது என்கிற ஐபிஎல் போட்டியின் புதிய விதிமுறை.

ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் சுற்று நாளை முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி, மே 29 அன்று நடைபெறும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். புதன் அன்று, லக்னெள - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி போட்டியிலிருந்து வெளியேறும். வெல்லும் அணி, முதல் ஆட்டத்தில் தோற்ற அணியுடன் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்கு 2-வது அணியாகத் தகுதி பெறும். 

இந்நிலையில் கொல்கத்தாவில் நிலவும் வானிலை காரணமாக புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இறுதிச்சுற்று உள்பட பிளேஆஃப் ஆட்டங்களில் மழையால் ஆட்டம் தொடங்க முடியாவிட்டால், சூப்பர் ஓவரைக் கொண்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். சூப்பர் ஓவரையும் நடத்த முடியாத நிலையில் மைதானம் இருந்தால் லீக் சுற்றின் முடிவில் அணிகள் பெற்றுள்ள இடங்களைக் கொண்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். 

மழை காரணமாக ஆட்டம் இரவு 9.40 மணிக்குத் தொடங்கினால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாது. இறுதிச்சுற்றில் இரவு 10.10 மணி வரைக்கும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதிச்சுற்று இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.

தேவைப்பட்டால் இரு அணிகளும் தலா 5 ஓவர்கள் விளையாடி ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்கலாம். அந்த ஆட்டம் இரவு 11.56க்குத் தொடங்கி  (அடுத்த நாள்) அதிகாலை 12.50க்குள் முடியவேண்டும். இறுதிச்சுற்றில் இந்நிலை ஏற்பட்டால் ஆட்டம் (அடுத்த நாள்) அதிகாலை 12.26க்குத் தொடங்கலாம். 

5 ஓவர் ஆட்டமும் நடத்த முடியாமல் போனால் சூப்பர் ஓவரைக் கொண்டு வெற்றியாளரைத் தீர்மானிக்கலாம். (அடுத்த நாள்) அதிகாலை 12.50க்குள் இந்த ஆட்டம் தொடங்கப்பட வேண்டும். (டி20 கிரிக்கெட்டில் மழை காரணமாக இரு அணிகளும் 5 ஓவர்கள் விளையாடலாம். அதற்கும் வாய்ப்பில்லையென்றால் ஆட்டம் ரத்து செய்யப்படும். )

இறுதிச்சுற்றுக்கு மட்டும் மாற்று ஏற்படாகக் கூடுதல் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. மே 29 அன்று ஆட்டம் நடக்காமல் போனால் அடுத்த நாள், மே 30 அன்று இரவு 8 மணிக்கு இறுதிச்சுற்று ஆட்டம் தொடங்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com