ரஷித் கானும் நானும் பந்துவீசினால்...: சாய் கிஷோர்

ரஷித் கானும் நானும் பந்துவீசினால்...: சாய் கிஷோர்

ரஷித் கானுடன் இணைந்து பந்துவீசுவது விக்கெட்டுகள் எடுக்க உதவியாக இருப்பதாக குஜராத் அணியில் விளையாடும் தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ரஷித் கானுடன் இணைந்து பந்துவீசுவது விக்கெட்டுகள் எடுக்க உதவியாக இருப்பதாக குஜராத் அணியில் விளையாடும் தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 3 ஆட்டங்களில் 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் கிஷோர். இரு ஆட்டங்களில் அவர் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்கப்படவில்லை. சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டும் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளைக் கொடுத்தார். 3 ஆட்டங்களில் எகானமி - 5.80.

குஜராத் அணியில் ரஷித் கானுடன் இணைந்து பந்துவீசுவது பற்றி சாய் கிஷோர் கூறியதாவது:

ரஷித் கான் பந்துவீச்சில் அதிரடியாக விளையாட முடியவில்லை என்றால் என்னுடைய ஓவரில் ரன்கள் அடிக்க நினைப்பார்கள். அது நல்ல விஷயம். இருவரில் யாராவது ஒருவருடைய ஓவரில் ரன்கள் எடுக்க முயன்றால் இன்னொருவருக்கு விக்கெட்டுகள் எடுப்பது சுலபமாகிவிடும். சிலசமயங்களில் தான் ரஷித் கான் ஓவரில் ரன்கள் எடுப்பார்கள். பெரும்பாலும் அவர் ரன்கள் குறைவாகவே கொடுப்பார். 

ரஷித் கான் வேகமாகப் பந்துவீசுவார். பந்து இருபுறமும் சுழலும். அதுபோல பந்துவீசுவது கடினம். அதைக் கற்றுக்கொண்டு விட்டால் அதேபோல பந்துவீசினால் போதும். என்னுடைய பந்துவீச்சு உத்தி, ஆட்டத்தின் சூழலைக் கொண்டு தீர்மானிப்பதாகும். பலவிதங்களில் என் பந்துவீச்சை மாற்றிக்கொள்வேன். திறமையை விடவும் யோசிப்பதைக் கொண்டு தான் என் பந்துவீச்சு அமையும். ஒவ்வொரு பந்துவீச்சாளரும் ஒவ்வொரு விதமாகப் பந்துவீசுவார். அதுதான் கிரிக்கெட்டின் அழகே. பேட்டிங்கில் எப்படி ஒவ்வொரு பேட்டருக்கும் ஒவ்வொரு திறமை இருக்குமோ அதுபோல. என்னுடைய திறமையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நானும் ரஷித் கானும் ஒன்றாகப் பந்துவீசும்போது பேட்டர்களுக்குச் சவாலாக அமையும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com