ஐபிஎல் போட்டிகளுக்கான தண்ணீர் பயன்பாடு குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

ஐபிஎல் போட்டிகளுக்காக பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறித்து பசுமை தீர்ப்பாயம் கேள்வி.
ஐபிஎல் போட்டிகளுக்கான தண்ணீர் பயன்பாடு குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!
படம் | ஐபிஎல்

ஐபிஎல் போட்டிகளுக்காக பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறித்த விவரங்களை கர்நாடக கிரிக்கெட் வாரியத்திடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே கர்நாடகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஐபிஎல் போட்டிகள் பெங்களூருவில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், போட்டிகள் எந்தவித தடையுமின்றி நடத்தப்பட்டு வருகின்றன.

ஐபிஎல் போட்டிகளுக்கான தண்ணீர் பயன்பாடு குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!
மும்பை இந்தின்ஸுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ்!

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்காக பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறித்த விவரங்களை கர்நாடக கிரிக்கெட் வாரியத்திடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தக் கேள்விக்கு கர்நாடக கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவிப்பை நாங்கள் வாசித்தோம். பெங்களூரு கிரிக்கெட் மைதானம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனால், தொடர்ச்சியாக போட்டியை நடத்துவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்கான தண்ணீர் பயன்பாடு குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!
பென் ஸ்டோக்ஸின் முடிவு சரியானது: இங்கிலாந்து முன்னாள் வீரர்

குடிநீரை தேவையில்லாமல் பயன்படுத்த கர்நாடக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com