மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்படம் | ஐபிஎல்

தில்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்!

தில்லி கேப்பிடல்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

தில்லி கேப்பிடல்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை முதலில் பேட் செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்
மயங்க் யாதவின் ஓவரில் கவனமாக விளையாடுங்கள்: டேவிட் மில்லர்

மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 49 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து டிம் டேவிட் (45 ரன்கள்), இஷான் கிஷன் (42 ரன்கள்), ஹார்திக் பாண்டியா மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு தலா 39 ரன்கள் எடுத்தனர். தில்லி தரப்பில் அக்‌ஷர் படேல் மற்றும் நோர்கியா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கலீல் அகமது ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னர் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் பிரித்வி ஷா மற்றும் அபிஷேக் போரெல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தது. இருப்பினும், பிரித்வி ஷா 66 ரன்களிலும், அபிஷேக் போரெல் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 25 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்
பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்: குமார் சங்ககாரா

இறுதியில் தில்லி கேப்பிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மும்பை தரப்பில் ஜெரால்டு கோட்ஸீ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ரொமாரியோ ஷெப்பர்டு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

மும்பை அணிக்காக 20-வது ஓவரில் அதிரடியாக விளையாடி 32 ரன்கள் குவித்த ரொமாரியோ ஷெப்பர்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com