எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்: குமார் சங்ககாரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

News image

ஜோஸ் பட்லர் - படம் | ஐபிஎல்

Updated On :7 ஏப்ரல் 2024, 4:18 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

குமார் சங்ககாரா

குமார் சங்ககாரா - படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெள்ளைப் பந்து போட்டிகளில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர். வெளியிலிருந்து வரும் விமர்சனங்களுக்கு அதிகம் கவனம் கொடுக்காமல் பட்லர் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்றையப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.