பந்துவீச்சில் அசத்திய சிஎஸ்கே; 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.
ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜாபடம் | ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா முதலில் பேட் செய்தது.

ரவீந்திர ஜடேஜா
அடுத்த போட்டியில் விளையாடுவாரா மயங்க் யாதவ்?

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். பில் சால்ட் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து, சுனில் நரைன் மற்றும் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை பவர் பிளே வரை தாக்குப் பிடித்தது. பவர் பிளே முடிவடைந்து ரவீந்திர ஜடேஜா வீசிய முதல் பந்திலேயே ரகுவன்ஷி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் சுனில் நரைன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் (3 ரன்கள்), ரமன்தீப் சிங் (13 ரன்கள்), ரிங்கு சிங் (9 ரன்கள்), ஆண்ட்ரே ரஸல் (10 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி வரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரவீந்திர ஜடேஜா
ஸ்டிரைக் ரேட்டை விட விராட் கோலியின் மதிப்பு பெரிது: மே.இ.தீவுகள் முன்னாள் வீரர்

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். முஸ்தபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்‌ஷனா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com