தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தினேஷ் கார்த்திக், படிதார் அதிரடி: மும்பைக்கு 197 ரன்கள் இலக்கு!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

News image

தினேஷ் கார்த்திக்

படம் | ஐபிஎல்

Updated On :11 ஏப்ரல் 2024, 4:10 pm

DIN

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். சிறப்பான ஃபார்மில் விளையாடி வந்த விராட் கோலி இன்றையப் போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய வில் ஜாக்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க டு பிளெஸ்ஸி மற்றும் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய ரஜத் படிதார் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன்பின் களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் மற்றும் மஹிபால் லோம்ரோர் 0 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் டு பிளெஸ்ஸி 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 23 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜெரால்டு கோட்ஸீ, ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.