ரியான் பராக்குக்கு சங்ககாரா புகழாரம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்குக்கு அந்த அணியின் இயக்குநர் குமார் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார்.
ரியான் பராக்குக்கு சங்ககாரா புகழாரம்!
படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்குக்கு அந்த அணியின் இயக்குநர் குமார் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்கின் ஆட்டத்துக்கு பலனின்றி போனது. இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடரில் 261 ரன்களுடன் ரியான் பராக் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரியான் பராக்குக்கு சங்ககாரா புகழாரம்!
ரஷித் கானுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் இந்திய கேப்டன்!

இந்த நிலையில், ரியான் பராக்கின் திறமை அனைவரும் பார்ப்பதற்காக இன்னும் அதிகம் உள்ளது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் குமார் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார்.

குமார் சங்ககாரா
குமார் சங்ககாரா படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரியான் பராக் சிறப்பாக விளையாடுகிறார். ரியான் பராக்கின் திறமை அனைவரும் பார்ப்பதற்கு இன்னும் இருக்கிறது என நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பை அணித் தேர்வுக்கு ரியான் பராக்கின் பெயர் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவது போன்ற விஷயங்கள் ஐபிஎல் தொடருக்கு பிறகு நடக்க உள்ளவை.

ரியான் பராக்குக்கு சங்ககாரா புகழாரம்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ஆடம் ஸாம்பா!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பராக் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அவர் கடினமாக உழைக்கிறார். சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஐபிஎல் தொடர் இல்லாதபோதும் அவர் கிரிக்கெட்டுக்காக கடுமையாக உழைக்கிறார். அதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். அவருக்கு நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com