ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சிஎஸ்கே பேட்டிங்; பதிரானா அணியில் சேர்ப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
ருதுராஜ் கெய்க்வாட்- படம் | ஐபிஎல்
Updated On :14 ஏப்ரல் 2024, 1:43 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட் செய்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மஹீஷ் தீக்‌ஷனாவுக்குப் பதிலாக அணியில் பதிரானா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் மோதிக் கொள்வதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டிக்கு கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.