ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்த கடினமாக உழைக்க வேண்டுமென டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
டேனியல் வெட்டோரி
டேனியல் வெட்டோரி படம் |சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்த கடினமாக உழைக்க வேண்டுமென சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தில் உள்ளது.

டேனியல் வெட்டோரி
பில் சால்ட் அதிரடி: லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா அசத்தல் வெற்றி!

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்த கடினமாக உழைக்க வேண்டுமென சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் திறமையை எந்த ஒரு அணியும் குறைத்து மதிப்பிடுவதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் மிகச் சிறந்த அணி. அவர்களை வீழ்த்த வேண்டுமென்றால், நமது கடின உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஐபிஎல் போட்டியும் கடினமானது. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெறாத போட்டிகள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றார்.

டேனியல் வெட்டோரி
ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி நேபாள வீரர் சாதனை (விடியோ)

ஐபிஎல் தொடரில் நாளை (ஏப்ரல் 15) பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com