ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி நேபாள வீரர் சாதனை (விடியோ)

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஓவரின் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி நேபாள வீரர் சாதனை படைத்துள்ளார்.
திபேந்திர சிங் அய்ரி
திபேந்திர சிங் அய்ரிபடம் | ஐசிசி

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஓவரின் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி நேபாள வீரர் திபேந்திர சிங் அய்ரி சாதனை படைத்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச ஆடவர் டி20 தொடரில் கத்தாருக்கு எதிரானப் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்னதாக சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் யுவராஜ் சிங் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரன் பொல்லார்டு ஆகியோர் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனைப் படைத்துள்ளனர். அந்த வரிசையில் அய்ரி மூன்றாவது வீரராக இணைந்துள்ளார்.

திபேந்திர சிங் அய்ரி
தாயகம் திரும்பிய மிட்செல் மார்ஷ்; காரணம் என்ன?

அதிரடியாக விளையாடிய திபேந்திர சிங் அய்ரி 21 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். இந்தப் போட்டியில் நேபாளம் 210 ரன்கள் குவித்தது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார். அதேபோல அமெரிக்காவின் ஜாஸ்கரன் மல்ஹோத்ரா பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார்.

திபேந்திர சிங் அய்ரி
ஷிகர் தவானுக்கு காயம்; பஞ்சாப் கிங்ஸுக்கு பின்னடைவா?

ஒட்டுமொத்தமாக சர்வதேசப் போட்டிகளில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனைப் படைத்த 5-வது வீரர் திபேந்திர சிங் அய்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com