தாயகம் திரும்பிய மிட்செல் மார்ஷ்; காரணம் என்ன?

தில்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பியுள்ளார்.

படம் | ஐபிஎல்

Published On :

காயம் காரணமாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேப்பிடல்ஸ், இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், காயம் காரணமாக அந்த அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பியுள்ளது தில்லி கேப்பிடல்ஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தில்லி கேப்பிடல்ஸ் விளையாடிய கடந்த இரண்டு போட்டிகளிலும் மிட்செல் மார்ஷ் அணியில் இடம்பெறவில்லை. அவர் கடைசியாக கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 23 ஆக உள்ளது.

சிகிச்சை பெறுவதற்காக தாயகம் திரும்பியுள்ள மிட்செல் மார்ஷ் மறுபடியும் அணியில் இணைவாரா, மாட்டாரா என்பது குறித்து அணி நிர்வாகம் எதுவும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.