இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரில் இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதியைப் போன்றது என ஆர்சிபி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்
படம் | ஆர்சிபி (எக்ஸ்)

ஐபிஎல் தொடரில் இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதியைப் போன்றது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்
எம்.எஸ்.தோனிக்கு எதிராக எங்களது யுக்தி வெற்றி பெற்றால்... என்ன சொல்கிறார் எரிக் சைமன்ஸ்!

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதியைப் போன்றது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இனிவரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதியைப் போன்றது. ஆனால், போட்டியில் மிகுந்த வலிமையோடு எப்படி திரும்ப வருவது என்பது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும். சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டி எங்களுக்கு கடுமையாக அமைந்தது. தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றார்.

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்
ஷிவம் துபேவுக்கு பந்துவீச அஞ்சும் எதிரணிகள்: சிஎஸ்கே பயிற்சியாளர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி தனது அடுத்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com