விராட் கோலியின் ஆட்டமிழப்பு குறித்து ஆர்சிபி கேப்டன் கூறியதென்ன?

விராட் கோலியின் ஆட்டமிழப்புக்கு ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் ஆட்டமிழப்பு குறித்து ஆர்சிபி கேப்டன் கூறியதென்ன?
படம் | ஐபிஎல்

விராட் கோலியின் ஆட்டமிழப்புக்கு ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

விராட் கோலியின் ஆட்டமிழப்பு குறித்து ஆர்சிபி கேப்டன் கூறியதென்ன?
அச்சமின்றி விளையாட ஊக்கமளிக்கும் ஆஷிஷ் நெஹ்ரா: சாய் கிஷோர்

இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்த விதம் மாபெரும் பேசுபொருளானது. ஹர்சித் ராணா வீசிய ஃபுல் டாஸ் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். இடுப்புக்கு மேல் பந்து சென்றபோதிலும், விராட் கோலி க்ரீசை விட்டு வெளியே வந்து பந்தை அடித்ததால் அவருக்கு நடுவர்கள் அவுட் கொடுத்தனர். இதனால், விராட் கோலி கடும் அதிருப்தியடைந்தார். நடுவர்களுடன் விவதாத்தில் ஈடுபட்டு பின்னர் பெவிலியன் திரும்பினார். அதிருப்தியில் பெவிலியன் திரும்பும் வழியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியை தனது கையுறைகளால் (க்ளௌஸ்) தாக்கினார்.

இந்த நிலையில், விராட் கோலியின் ஆட்டமிழப்புக்கு ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி அதிருப்தி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு டு பிளெஸ்ஸி பேசியதாவது: அந்த முடிவு பைத்தியக்காரத்தனமாக இருந்தது. இருப்பினும், விதிகள் என்பதை ஒன்றும் செய்ய முடியாது. விராட் கோலி ஆட்டமிழந்தபோது, நானும் விராட் கோலியும் பந்து இடுப்புக்கு மேலே செல்கிறது என நினைத்தோம். ஒரு அணி இடுப்புக்கு மேலே பந்து வீசப்பட்டுள்ளது என நினைக்கிறது. மற்றொரு அணி அப்படி நினைக்கவில்லை. காலங்கள் செல்ல செல்ல ஆட்டங்கள் இப்படிதான் சென்று கொண்டிருக்கின்றன என்றார்.

விராட் கோலியின் ஆட்டமிழப்பு குறித்து ஆர்சிபி கேப்டன் கூறியதென்ன?
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்றார் குகேஷ்

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com