வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | ஐபிஎல்
Updated On :28 ஏப்ரல் 2024, 12:57 pm

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான சஹா 5 ரன்களிலும், ஷுப்மன் கில் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.