இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடினமாக மாறி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடினமாக மாறி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் 250 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடினமாகி வருகிறது. ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் சிறப்பாக விளையாடினார். அவர் முதல் நாளிலில் இருந்தே அற்புதமாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது பேட்டிங்கின் மதிப்பு கூடிக் கொண்டே போகிறது என்றார்.
நேற்றையப் போட்டியில் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் 27 பந்துகளில் அதிரடியாக 84 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











