ஐபிஎல் 2024-இல் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்: பிசிசிஐ அனுமதி!

இந்த ஆண்டு ஐபிஎல் 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகளைச் சேர்க்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
ஐபிஎல் 2024-இல் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்: பிசிசிஐ அனுமதி!

இந்த ஆண்டு ஐபிஎல் 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகளைச் சேர்க்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் ஊட்டுவதற்காக இந்த புதிய இரண்டு விதிகளைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இம்பாட் வீரர் என்ற விதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் நாளை (மார்ச்.22) மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்

பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்களை வீசலாம். முன்னதாக ஒரு பவுன்ஸர் மட்டுமே வீச வேண்டும். 2வது வீசப்படும் பவுன்ஸர் நோ பால் ஆக அறிவிக்கப்படும். இனிமேல் 3வது ஆக வீசப்படும் பவுன்ஸர் மட்டுமே நோ பால் ஆகும்.

பௌலர்களுக்கு இது கூடுதல் சௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சோதனை அடிப்படியில் 2023-24 சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே இதனை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்க பிசிசிஐ அனுமதியளித்துள்ளது.

ஐபிஎல் 2024-இல் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்: பிசிசிஐ அனுமதி!
சிஎஸ்கேவின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!

2. ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்

ஐபிஎல் சீசனில், ஆட்டத்தின்போதான கள முடிவுகளை நடுவா்கள் விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மைதானத்திலுள்ள 8 ‘ஹாக்-ஐ’ கேமராவின் காட்சிகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும். இதற்காக, அந்த ஒளிப்பதிவுகளை கையாளும் இரு நிபுணா்களும் தொலைக்காட்சி நடுவரின் உடனேயே இருப்பாா்கள். இதற்கு முன் இந்த இரு தரப்புக்கும் இடையே தொலைக்காட்சி ஒளிபரப்பு இயக்குநா் தொடா்பாளராக இருந்த நிலையில், இந்த முறை அவரின் தலையீடு இருக்காது. இதனால் முடிவுகளை துரிதமாக மேற்கொள்ளலாம்.

ஐபிஎல் 2024-இல் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்: பிசிசிஐ அனுமதி!
அதிரடியான தொடக்கம் தேவை: கம்மின்ஸ் திட்டம்!

தொலைக்காட்சி நடுவா்களுக்கு இந்த முறை கூடுதல் காட்சிகளும், குறிப்பாக ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகளும் அளிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு ஃபீல்டா் பவுண்டரி லைனை ஒட்டிய வகையில் பந்தை கேட்ச் பிடிக்கும்போது, அவரது கைகள் பந்தை பிடிப்பது ஒரு பக்கமும், கால்கள் பவுண்டரி லைனை நெருங்கியிருப்பதை மறுபக்கமும் என ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகள் ஒரே நேரத்தில் காட்டும். இது தெளிவான முடிவை நடுவா் மேற்கொள்ள உதவும். ஓவா் த்ரோ போன்ற சூழ்நிலைகளிலும் இது உதவும்.

வழக்கமாக மைதானம் முழுவதும் 8 அதிவேக ‘ஹாக்-ஐ’ கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பொதுவாக அவை ‘பால் டிராக்கிங்’, ‘அல்ட்ரா எட்ஜ்’ ஆகியவற்றுக்காக மட்டுமே பிரதானமாக இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன. ஸ்டம்ப்பிங், ரன் அவுட், கேட்ச், ஓவா்த்ரோ போன்ற சூழ்நிலைகளில், தொலைக்காட்சி நேரலைக்கான ஒளிப்பதிவின் காட்சிகளையே நடுவா் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை மேற்கூறிய அனைத்து சூழ்நிலைகளிலுமே ஹாக்-ஐ கேமரா பதிவுகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com