ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியைப் பாராட்டிய முன்னாள் வீரர்!

சிஎஸ்கேவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியைப் பாராட்டிய முன்னாள் வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

17-வது ஐபிஎல் சீசன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அணியை வழிநடத்தினார். இப்போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பை வெற்றியுடன் தொடங்கியுள்ளார் கெய்க்வாட்.

ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியைப் பாராட்டிய முன்னாள் வீரர்!
இதனை தோனியிடம் கற்றுக் கொண்டேன்: ஷிவம் துபே

இந்த நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே-வை ருதுராஜ் சிறப்பாக வழிநடத்தியதாக சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சிஎஸ்கே-வை ருதுராஜ் உண்மையில் சிறப்பாக வழிநடத்தினார். கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு உங்களது முதல் போட்டி என்பது மிகவும் முக்கியமானது. அனைவரும் தங்களது கேப்டன்சியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்றே நினைப்பார்கள். நேற்று ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கேவின் வெற்றியும் அவ்வாறானதே. அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் அவரது கேப்டன்சியில் எனக்குப் பிடித்திருந்தது. முஸ்தபிஷுர் ரஹ்மானை அவர் சிறப்பாக பயன்படுத்தினார்.

ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியைப் பாராட்டிய முன்னாள் வீரர்!
அறிமுகப் போட்டியில் அசத்திய ரச்சின் ரவீந்திரா!

துஷார் தேஷ்பாண்டே இறுதி ஓவரை நன்றாக வீசுவார் என நம்பிக்கை வைத்து அவர் தீபக் சஹாரை பந்துவீச்சில் அடிக்கடி பயன்படுத்தினார். ஒரே ஓவரில் துஷார் தேஷ்பாண்டே 25 ரன்களை விக்கெட்டுக் கொடுத்தபோதிலும் அவர் மீது நம்பிக்கை வைத்து இறுதி ஓவரை வீசும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். தேஷ்பாண்டே இறுதி ஓவரை சிறப்பாக வீசினார். ருதுராஜின் கேப்டன்சி போட்டி முழுவதும் சிறப்பாக இருந்தது என்றார்.

சென்னை தனது அடுத்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com