குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.
டேவிட் மில்லர்
டேவிட் மில்லர்படம் | AP

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்தது.

டேவிட் மில்லர்
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வனிந்து ஹசரங்கா!

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமத் தலா 29 ரன்கள் எடுத்தனர். க்ளாசன் (24 ரன்கள்), ஷபாஸ் அகமது (22 ரன்கள்), டிராவிஸ் ஹெட் (19 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்மதுல்லா ஓமர்சாய், உமேஷ் யாதவ், ரஷித் கான் மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

டேவிட் மில்லர்
மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்!

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த இணை குஜராத் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், விருத்திமான் சஹா 25 ரன்களிலும், ஷுப்மன் கில் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, சாய் சுதர்ஷன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது. சுதர்ஷன் 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இறுதியில் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் 44 ரன்களுடனும், விஜய் சங்கர் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சன் ரைசர்ஸ் தரப்பில் ஷபாஸ் அகமது, மயங்க் மார்கண்டே மற்றும் பாட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

டேவிட் மில்லர்
உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? பிசிசிஐ தகவல்!

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com