பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!
படம் | ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட் செய்தது.

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!
முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே களமிறங்கினர். ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் டேரில் மிட்செல் மற்றும் ருதுராஜ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இந்த இணையை ராகுல் சஹார் பிரித்தார். கேப்டன் ருதுராஜ் 32 ரன்களில் ராகுல் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே ஷிவம் துபேவின் விக்கெட்டினையும் வீழ்த்தி அசத்தினார் ராகுல் சஹார்.

படம் | ஐபிஎல்

டேரில் மிட்செல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் மொயீன் அலி ((17 ரன்கள்), மிட்செல் சாண்ட்னர் (11 ரன்கள்), ஷர்துல் தாக்குர் (17 ரன்கள்), எம்.எஸ்.தோனி (0 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ராகுல் சஹார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!
ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com