ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
டேவிட் மில்லர்
டேவிட் மில்லர்படம் | ஐபிஎல்

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.

டேவிட் மில்லர்
பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

இந்த நிலையில், ஷுப்மன் கில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் மிகச் சிறந்த வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் இளம் வீரர். அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், கேப்டன் பதவிக்கு ஏற்றவாறு அவர் தன்னை நன்றாக மாற்றிக் கொண்டு வருவதாக நினைக்கிறேன். பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

ஷுப்மன் கில்
ஷுப்மன் கில் படம் | ஐபிஎல்

அணியில் அனுபவமிக்க வீரரான முகமது ஷமி இல்லாதது பின்னடைவாக உள்ளது. முகமது ஷமி பவர் பிளேவில் நன்றாக பந்துவீசக் கூடியவர். சில போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடைந்தோம். அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என்றார்.

டேவிட் மில்லர்
நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com