12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது 12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்PTI
Published on
Updated on
1 min read

ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.

முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களே சோ்க்க, பஞ்சாப் 18.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வென்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியுற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சன்
தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் அற்புதமாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய தனது ஐபிஎல் போட்டிகளில் சஞ்சு சாம்சன் 500 ரன்களை தொட்டதே இல்லை. ஆனால் இந்த முறை முதல்முறையாக 500க்கும் அதிகமான ரன்களை கடந்துள்ளார். இதனால்தான் இந்திய அணியின் டி20 உலகக் கோப்பைக்கும் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

500 ரன்கள் மட்டுமின்றி 156.52 ஸ்டிரைக் ரேட்டுடன் அதிரடியாகவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சன்
ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

வருடம் வாரியாக சஞ்சு சாம்சனின் ரன்கள்:

2013 - 206 ரன்கள்

2014 - 339 ரன்கள்

2015 - 204 ரன்கள்

2016 - 291 ரன்கள்

2017 - 386 ரன்கள்

2018 - 441 ரன்கள்

2019 - 342 ரன்கள்

2020 - 375 ரன்கள்

2021 - 484 ரன்கள்

2022 - 458 ரன்கள்

2023 - 362 ரன்கள்

2024 - 504* ரன்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com