ஐபிஎல் எலிமினேட்டர்: ஆர்சிபியா? ராஜஸ்தான் ராயல்ஸா? ஓர் அலசல்!

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாளை (மே 22) மோதிக் கொள்கின்றன.
ஐபிஎல் எலிமினேட்டர்: ஆர்சிபியா? ராஜஸ்தான் ராயல்ஸா? ஓர் அலசல்!
படம் | ஐபிஎல்

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாளை (மே 22) மோதிக் கொள்கின்றன.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில், இன்று நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. நாளை (மே 22) எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலசஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த இரண்டு போட்டிகளுமே அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் எலிமினேட்டர்: ஆர்சிபியா? ராஜஸ்தான் ராயல்ஸா? ஓர் அலசல்!
ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு கட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் நிலையில் இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக ஏற்பட்ட 4 தோல்விகளும், மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியும் அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. அதன் காரணமாக, சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்றாமிடம் பிடித்தது.

படம் | ஐபிஎல்

டு பிளெஸ்ஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளே ஆஃப் பயணம் நம்பமுடியாத விதமாக இருந்தது. முதல் 8 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியடைந்ததால், ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாது என்ற நிலையே இருந்தது. ஆனால், அவர்கள் தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது அனைவரது புருவங்களையும் உயரச் செய்தது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அனைவரையும் ஆர்சிபி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஐபிஎல் எலிமினேட்டர்: ஆர்சிபியா? ராஜஸ்தான் ராயல்ஸா? ஓர் அலசல்!
எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

ராஜஸ்தான் ராயல்ஸை பொறுத்தவரை, அந்த அணியில் கடந்த சில போட்டிகளாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளுமே சற்று தொய்வுடன் காணப்படுகிறது. அந்த அணியின் அதிரடி வீரரான ஜோஸ் பட்லர் இங்கிலாந்து திரும்பியது, அந்த அணியின் பேட்டிங்குக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. ஜோஸ் பட்லர் இல்லாததால், அணிக்கு ரன்கள் சேர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியாக் பராக் ஆகிய மூன்று வீரர்களை நம்பியே உள்ளது. ஷிம்ரன் ஹெட்மேயர் அணிக்காக பின்வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

படம் | ஐபிஎல்

மிகப் பெரிய அகமதாபாத் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் அந்த அணிக்கு சற்று ஆறுதலளிக்கும் விதத்தில் உள்ளனர். மற்ற ஆடுகளங்களைப் போல் மிகக் குறுகிய பவுண்டரிகள் இல்லாததால், இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்வது சற்று கடினம். நடப்பு ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இதுவரை 12 போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், 2 முறை மட்டுமே 200 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தினால், இந்த மைதானத்தில் வெற்றி பெறலாம் என்பது தெளிவாகிறது.

ஐபிஎல் எலிமினேட்டர்: ஆர்சிபியா? ராஜஸ்தான் ராயல்ஸா? ஓர் அலசல்!
இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். 14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 708 ரன்கள் குவித்துள்ளார். தொடக்கப் போட்டிகளில் கேப்டன் டு பிளெஸ்ஸி தடுமாறினாலும், பின்னர் அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் ஃபார்முக்குத் திரும்பிய ரஜத் படிதார் பெங்களூரு அணிக்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறார்.

படம் | ஐபிஎல்

பெங்களூரு அணியில் வில் ஜாக்ஸ் இல்லாதபோதிலும், அந்த அணி பெரிய அளவில் பாதிக்கப்படப் போவதில்லை. தினேஷ் கார்த்திக் பின்வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது வேலையை கட்சிதமாக செய்து வருகிறார். பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய யஷ் தயாள் அந்த அணியின் பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கிறார்.

தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பெற்று தன்னம்பிக்கையின் உச்சியில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எலிமினேட்டர் போட்டியில் நாளை (மே 22) மோதிக் கொள்வதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் எலிமினேட்டர்: ஆர்சிபியா? ராஜஸ்தான் ராயல்ஸா? ஓர் அலசல்!
இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

இந்த இரு அணிகளில் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டிக்குத் தகுதி பெறப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com