இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

113 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்; கோப்பை யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image

படம் | ஐபிஎல்

Updated On :26 மே 2024, 4:09 pm

DIN

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். அபிஷேக் சர்மா 2 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும் ஆட்டமிழந்து பேரதியர்ச்சியளித்தனர். அதன்பின், ராகுல் திரிபாதி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

Story image

அய்டன் மார்கரம் (20 ரன்கள்), நிதீஷ் ரெட்டி (13 ரன்கள்), கிளாசன் (16 ரன்கள்), ஷாபாஸ் அகமது (8 ரன்கள்) எடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ஆட்டத்தின் இறுதியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்ததால், சன்ரைசர்ஸ் 100 ரன்களைக் கடந்தது.

இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.