டி20 லீக் போட்டிகளுக்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறாரா மிட்செல் ஸ்டார்க்?

டி20 லீக் போட்டிகளுக்காக சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க் படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

டி20 லீக் போட்டிகளுக்காக சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடியுள்ளார். துபையில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மிட்செல் ஸ்டார்க்
டி20 உலகக் கோப்பையையும் கையில் ஏந்துவேன்: ரிங்கு சிங்

நடப்பு ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அதிக அளவில் ரன்கள் குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும், அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீர், மிட்செல் ஸ்டார்க் மிகச் சிறந்த வீரர், அவர் மீது நம்பிக்கையுள்ளது என தெரிவித்திருந்தார். கம்பீர் கூறியது போலவே, குவாலிஃபையர் 1 மற்றும் ஐபிஎல் இறுதிப்போட்டி என இரண்டிலும் மிட்செல் ஸ்டார்க் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவரை பல கோடிகள் கொடுத்து ஏலத்தில் எடுத்தது சரியான முடிவே என கருதும்படியாக ஸ்டார்க் செயல்பட்டார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில், டி20 லீக் போட்டிகளுக்காக சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மிட்செல் ஸ்டார்க்
வெற்றிக் கொண்டாட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (விடியோ)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 9 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக முக்கியத்துவம் கொடுத்து விளையாடி வந்தேன். சில நேரங்களில் கிரிக்கெட்டிலிருந்து சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு, குடும்பத்தினருடன் நேரத்தினை செலவிட்டேன். எனது கிரிக்கெட் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஃபார்மட்டில் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் சில ஆண்டுகள் உள்ளன. அதனால், டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான கதவுகள் திறக்கப்படும் என்றார்.

மிட்செல் ஸ்டார்க்
அரங்கம் நிறைந்த ரசிகர்கள்; எம்.எஸ்.தோனி இல்லாததால் குறைந்த ஆரவாரம்!

34 வயதாகும் மிட்செல் ஸ்டார்க், எந்த ஃபார்மட்டிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்பது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதால், 50 ஓவர் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com