சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு முதல் தோல்வி

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
விராட் கோலி.
Updated On :2 ஏப்ரல் 2025, 5:41 pm

DIN

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் விளையாடின. இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரஜத் படிதார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பினாலும் லிவிங்ஸ்டன் ஒருபுறம் பொறுமையாக விளையாடி அரைசதம் (54) அடித்தார். இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் சார்பில் முகமது சிராஜ் 3, சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். ரஷித் கான் மிகவும் மோசமாக பந்துவீசி 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார். 170 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணியில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர்.

கேப்டன் கில் 14 ரன்களில் வெளியேற ஜாஸ் பட்லர் களம் கண்டார். சாய் சுதர்சன் - ஜோஸ் பட்லர் ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.

அடுத்து வந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்டும் பட்லருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய பட்லர் 39 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் ரூதர்ஃபோர்ட்டும் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். ஏற்கெனவே விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றியை ருசித்த பெங்களூரு அணி தற்போது முதல் தோல்வியை சந்தித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.