சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

News image

ஷ்ரேயாஸ் ஐயர்... - படம் | பிசிசிஐ

Updated On :2 ஏப்ரல் 2025, 2:30 pm IST

சென்னை முன்னாள் கேப்டன் தோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

18-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப் - லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 52* ரன்களும் விளாசினர். 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் கேப்டன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த வகையில், ஐபிஎல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் தோனியைப் பின்னுக்குத் தள்ளி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் 2-வது இடம்பிடித்துள்ளார்.

கடந்தாண்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியுடன் சேர்த்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தொடரில் பஞ்சாப் அணிக்காக 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.

தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள்

  • 10 -கௌதம் கம்பீர் (கொல்கத்தா) - 2014-2015

  • 8 - ஷேன் வார்னே (ராஜஸ்தான்) - 2008

  • 8 - ஷ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா, பஞ்சாப்) - 2024-25

  • 7 - எம்.எஸ்.தோனி (சென்னை) - 2013

  • 6 - கௌதம் கம்பீர் (கொல்கத்தா) - 2012

  • 6 - எம்.எஸ்.தோனி (சென்னை) - 2014

  • 6 - கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்) - 2018

  • 6 - எம்.எஸ்.தோனி (சென்னை) - 2019

  • 6 - ஃபாப் டூபிளெசிஸ் (பெங்களூரு) - 2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.