முகமது சிராஜ் அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 153 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது.
முகமது சிராஜ்
முகமது சிராஜ்படம் | AP
Updated on
1 min read

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டனஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் விளையாடியது.

மீண்டும் டாப் ஆர்டர் சொதப்பல்

முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சிறப்பாக விளையாடத் தவறினர். டிராவிஸ் ஹெட் (8 ரன்கள்), அபிஷேக் சர்மா (18 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் (17 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின் ஜோடி சேர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் கிளாசன் அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினர். இருப்பினும், கிளாசன் 27 ரன்கள், நிதீஷ் குமார் ரெட்டி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சன்ரைசர்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டினை அவர் வீழ்த்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com