பஞ்சாப் கிங்ஸ் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சண்டீகரில் நடைபெற்ற சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியில் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தப் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக பஞ்சாப் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. போட்டியின் போது அவர் மைதானத்தில் இருந்த உபகரணங்களை சேதப்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் சட்டவிதி 2.2-ஐ க்ளென் மேக்ஸ்வெல் மீறியுள்ளார். மேலும், தன் மீதான லெவல்-1 குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார். இதனால், கள நடுவரின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.
சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடிவரும் க்ளென் மேக்ஸ்வெல், நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பி வருகிறார். மேலும், நேற்றிரவு நடைபெற்ற போட்டியிலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!

கிளன் பிலிப்ஸ் மிகவும் அற்புதமான வீரர்; ஜோஸ் பட்லர் புகழாரம்!

ஃபிலிப்ஸ் ஏர்லைன்ஸ்... விமானியாகவும் திறமையை வெளிப்படுத்திய க்ளென் ஃபிலிப்ஸ்! - வைரல் விடியோ
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


