
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி பொறுப்பேற்றுள்ளார். தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே விலகியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி சென்னை அணி, ஒரேயொரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், வெற்றிபெறும் முனைப்புடன் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
கடைசியாக சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் திடலில் குஜராத்துக்கு எதிரான குவாலிஃபயர் 1 போட்டியில் தோனி சிஎஸ்கே வழிநடத்திருந்தார். அதன்பின்னர், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணியை தலைமை தாங்குகிறார்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவை மும்பை கேப்டனாக்க வலியுறுத்தும் ரசிகர்கள்! வைரலாகும் மீம்ஸ்!
43 வயதான தோனி தலைமையில் சென்னை அணி இதுவரை 62 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. அதில், 45 போட்டிகளில் வெற்றியும், 17 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
சிஎஸ்கேவின் அதிகபட்ச ஸ்கோர்: 246/5 vs ராஜஸ்தான் (2010)
சிஎஸ்கேவின் குறைந்தபட்ச ஸ்கோர்: 112/10 vs மும்பை(2012)
அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி: சிஎஸ்கே vs பஞ்சாப் (97 ரன்கள்)
அதிக விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: சிஎஸ்கே vs கொல்கத்தா (9 விக்கெட்டுகள்)
இதையும் படிக்க: ஸ்ரேயாஸ் ஐயரின் தன்னம்பிக்கை பிடிக்கும்: பஞ்சாப் கிங்ஸ் வீரர்