லக்னௌ பந்துவீச்சு: மிட்செல் மார்ஷ் விலகல்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ டாஸ் வென்றது...
டாஸின் போது ரிஷப் பந்த், ஷுப்மன் கில்.
டாஸின் போது ரிஷப் பந்த், ஷுப்மன் கில். படம்: எக்ஸ் / ஐபிஎல்
Published on
Updated on
1 min read

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் லக்னௌ அணியில் தொடக்க வீரரும் அதிரடி பேட்டருமான மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

மார்ஷ் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் இந்தப் போட்டியில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஹிம்மட் சிங் களமிறக்குகிறார்.

புள்ளிப் பட்டியலில் 6-ஆவது இடத்தில் இருக்கும் லக்னௌ இந்தப் போட்டியில் வென்றால் முதலிடத்துக்கு வர வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது இடத்தை தக்கவைத்துகொள்ள போராடும்.

இந்த அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குல்வந்த் கெஜ்ரோலியாவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன்ரைசஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பேட்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத் டைட்டன்ஸ் : சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ரூதர்போர்டு, ஷாருக் கான், ராகுல் தெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்: எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ரிஷப் பந்த், ஹிம்மட் சிங், டேவிட் மில்லர், அப்துல் சமாத், ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com