
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அபார ஆட்டத்தினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆட்டநாயகன் அபிஷேக் சர்மாவின் சாதனைகள்
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அபிஷேக் சர்மா, ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
நேற்றைய போட்டிக்குப் பிறகு அபிஷேக் சர்மா படைத்த சாதனைகள் பின்வருமாறு,
டாடா ஐபிஎல் தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்கள் குவித்த இந்திய வீரர்
டாடா ஐபிஎல் தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்கள் குவித்த 3-வது வீரர் (ஒட்டுமொத்தமாக)
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக அதிவேகமாக சதம் விளாசிய வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இரண்டாவது அதிவேக சதம் அடித்த வீரர்
ஹைதராபாத் திடலில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர்
இதையும் படிக்க: அபிஷேக் சர்மாவின் மிகப் பெரிய ரசிகன் நான்: பாட் கம்மின்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.