இமாலய இலக்கை எதிரணியினர் எளிதாக வென்றது சிரிப்பாக இருக்கிறது: ஷ்ரேயாஸ் ஐயர்

தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிரித்துக்கொண்டே பேசியது வைரலாகி வருகிறது.
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்படம்: ஐபிஎல்
Updated on
1 min read

தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிரித்துக்கொண்டே பேசியது வைரலாகி வருகிறது.

நேற்றிரவு (ஏப்.12) ஹைதராபாத் திடலில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 245/6 ரன்களை எடுத்தது.

அடுத்ததாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த இமாலய இலக்கை 18.3 ஓவர்களில் 247/2 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப் பெற்றது.

இந்தத் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது:

தோல்வியுற்றது சிரிப்பாக இருக்கிறது

உண்மையிலேயே இந்த இலக்கு மிகப்பெரியதனவே நினைத்தேன். ஆனால், சன்ரைசர்ஸ் 2 ஓவர்கள் மிச்சம் வைத்து வென்றது எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

நாங்கள் சில கேட்ச்சுகளை பிடித்திருக்கலாம். ஆனால், அபிஷேக் சர்மா மிகவும் அதிர்ஷ்டசாலி. சிறப்பாகவும் விளையாடினார்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எதிர்பார்த்த அளவுக்கு நாங்கள் பந்துவீசவில்லை. மீண்டும் எங்களது திட்டங்களை மாற்றியமைத்து புதியவற்றை அமலாக்க வேண்டும்.

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களின் பேட்டிங் உலகிற்கு அப்பாற்பட்டது போல் இருந்தன. அபிஷேக் சர்மாவின் பேட்டிங் நான் பார்த்த ஐபில் போட்டிகளில் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

ஓவர்களை சரியாக மாற்றிக்கொடுத்திருக்கலாம்

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களின் பார்ட்னர்ஷிப் நன்றாக அமைந்தது. அவர்கள் எங்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கவில்லை. ஓவர்களை சரியாக மாற்றிக்கொடுத்திருக்கலாம்.

லாக்கி பெர்குசன் விக்கெட் கொடுத்திருப்பார். எதிர்பாராமல் அவருக்கு ஏற்பட்ட காயம் போட்டிகளில் நடக்கும்தான். அதுவும் விளையாட்டின் ஒரு பகுதி. இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டிகளுக்கு முன்னேறுகிறோம்.

மற்ற வீரர்கள் சிறப்பாக பந்துவீசி இருக்கலாம். நானும் வதேராவும் 230 ரன்கள் நல்ல இலக்கு என்றே நினைத்தோம். ஆனால், ஈரப்பதம் எங்களுக்கு பிரச்னையை உண்டாக்கிவிட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com